அந்தமான் கடற்கரையில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகள் மற்றும் மணிப்பூரின் உக்ருல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 3.39 மணியளவில் அந்தமான் கடற்பகுதியில் பூமி அதிர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 4.4 ரிக்டர் கோளாக பதிவாகியுள்ளது என நிலநடுக்கவியல் தேசிய மையம் தற்போது தெரிவித்துள்ளது. மறுபுறம், செப்டம்பர் 11 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 11.01 மணியளவில், மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இரவில் நிலம் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஓடி வந்தனர்.
Tags :