அண்ணாமலையின் பாதயாத்திரை எடுபடவில்லை: அமைச்சர் சேகர்பாபு

by Staff / 12-09-2023 11:42:55am
அண்ணாமலையின் பாதயாத்திரை எடுபடவில்லை: அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை எடுபடவில்லை என்பதால் போராட்டங்கள் நடத்துகிறார் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். '45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன். இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், கோயில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தமிழிசைக்கு உரிமை இல்லை. இது சமத்துவத்திற்கான ஆட்சி. இதுபோன்ற உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்து எங்களுடைய பணியின் வேகத்தை தடுக்க முடியாது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வழியில் ஆட்சியை நடத்துகிறோம்' என்றார்.

 

Tags :

Share via

More stories