மருத்துவருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர்...மா சுப்பிரமணியன்

by Staff / 14-02-2024 12:57:21pm
மருத்துவருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர்...மா சுப்பிரமணியன்

விருதுநகர் மாவட்டம்,புயல் மழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சிவகாசி மருத்துவருக்கு அரசு பாராட்டு சான்று வழங்கி கௌரவித்துள்ளது கடந்த டிசம்பர் 17 , 18 தேதிகளில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் புயல் கனமழை பெய்தது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வேன் செல்ல முடியாத பகுதிக்கு சிவகாசி நகர்புற ம் சுகாதார நிலைய மருத்துவர் ஞானகுமார் இருசக்கர வாகனத்தில் சென்று முகாமில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தார் இதை எடுத்து சிவகாசி சுகாதார மாவட்டத்தில் பணியாற்றும் ஞானகுமார் புயல் மழை காலங்களில் சிறப்பாக பணியாற்றினார் என அரசு தேர்வு செய்தது தொடர்ந்து சென்னையில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஞானகுமாருக்கு பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார் இதுபோல தமிழகத்தில் உள்ள 25 மருத்துவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories