நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரது பேரனும், நடிகருமான துஷ்யந்த் படத்தயாரிப்புக்காக வாங்கிய ரூ.3.74 கோடியை வட்டியுடன் ரூ.9.39 கோடியாக திருப்பி செலுத்த தவறியுள்ளார். இது தொடர்பாக தனபாக்கியம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. துஷ்யந்த், சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகனாவார்.
Tags :