சீமான் வழக்கில் உச்ச நீதிமன்றம் தடைஉத்தரவு

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர் 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு அந்த நடிகை முதல் மனைவியா என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் சீமான் மீதான வழக்கை விசாரித்து 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. மேலும் தனக்கு 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக சீமான் மீது அந்த நடிகை ஆதாரங்களுடன் சில புகார்களை அளித்ததாகவும் தெரிகிறது.
Tags :