15 வயது சிறுமி தாக்கப்பட்டு பாழடைந்த வீட்டில் வீசிச் சென்றதாக கூறப்படும் சம்பவம் . காதலுடன் சேர்ந்த சிறுமி நாடகமாடியது விசாரணையில் அம்பலம்.

திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை இரு மர்ம நபர்கள் கட்டையால் தாக்கி பாழடைந்த வீட்டில் வீசிச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் புதிய திருப்பமாக சிறுமி காதலனுடன் சேர்ந்து நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. திருவாரூரில் இரு தினங்களுக்கு முன்பு பாழடைந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது 12 மணி நேரத்திற்கும் மேலாக சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் அதே பகுதியை சேர்ந்த பொறியாளர் மாணவன் சந்தோஷ் சிறுமி உடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாகவும் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கடத்தப்பட்டு பாழடைந்த வீட்டில் மயங்கி இருந்ததுபோல் நாடகமாடியது தெரியவந்தது.இதனையடுத்து சிறுமியின் காதலன் சந்தோஷ் போக்சோ சட்டாத்தில் கைது செய்யப்பட்டார்.
Tags :