40 முறை கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்ட 19 வயது இளைஞர்

சென்னையில் போதை மாத்திரை வாங்கி தருவதாக ஏமாற்றிய 19 வயது இளைஞரை போதைக்கு அடிமையான இருவர் சேர்ந்து 40 முறை கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை கிளாஸ் பேக்டரி சாலையில் 19 வயதுடைய இளைஞர் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது கொல்லப்பட்டவர் கொருக்குப்பேட்டை ஹரி நாராயண பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ராகுல் என்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த கொலை தொடர்பாக கொருக்குப்பேட்டை சேர்ந்த கௌரிஷங்கர் சரவணன் ரகுமான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த 15ஆம் தேதியன்று 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி சென்ற ராகுல் தங்களை ஏமாற்றிய தாகவும் அதற்கு பழிவாங்குவதற்காக கொடூரமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். சிசிடி கேமரா காட்சிகளை பார்த்தபோது ராகுலை வழிமறித்த இருவரில் ஒருவன் அவரை மடக்கிப் பிடித்துக் கொள்ள மற்றொருவன் கத்தியை எடுத்து அவரை 40 இடங்களில் சரமாரியாக வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர் இந்த கொலை சம்பவத்தை கண்டும் காணாதது போல கடந்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. போதை வஸ்துக்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதோடு போலீசார் ரோந்து பணியையும் புதிய இடங்களில் வாகன சோதனை களையும் தீவிரப்படுத்தி போதை கும்பல் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Tags :