கட்டிடம் இடிந்து விழுந்தது 3 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை சாந்தோம், சாந்தோம் நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கியின் கிளைக்கு எதிரில் கீழே மூன்று கடைகளுடன் கூடிய மாடி வீடும் கொண்ட பழைய கட்டிடம் உள்ளது.
இன்று காலை கீழேயுள்ள கடையை திறந்து வைத்து பழுது பார்க்கும் பணியில் மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.பிற்பகல் 3 மணி அளவில் யாரும் எதிர்பாராத வகையில் பாதி கட்டிடம் அப்படியே இடிந்து கீழே விழுந்தது. மூன்று வேலையாட்கள் கீழே நின்று திறந்திருந்த கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
ஓரிரு செங்கல்கள் பெயர்ந்து விழுந்தவுடன் மின்னல் வேகத்தில் வெளியே ஓடி வந்து விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Tags : The building collapsed and 3 people fortunately survived.