மதுரை கோட்டத்தில் 95 ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு நிரந்தர கடைகள் கட்ட ஏற்பாடு

by Editor / 25-08-2022 05:18:54pm
மதுரை கோட்டத்தில் 95 ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு நிரந்தர கடைகள் கட்ட ஏற்பாடு

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த ரயில் நிலையங்களில் தற்போது தற்காலிக விற்பனை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் சுங்குடி சேலைகள், தூத்துக்குடியில் மக்ரூன், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், பழனியில் பஞ்சாமிர்தம், ராமேஸ்வரத்தில் கடல்பாசி, திருநெல்வேலியில் பனை பொருட்கள் போன்ற உள்ளூர் தயாரிப்புகள் ரயில் நிலையங்களில் விற்பனையாகி வருகின்றன. ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க நிரந்தர கடைகள் அமைக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிரந்தர கடைகள் தேசிய வடிவமைப்பு நிறுவன ஆலோசனையின் பேரில் கட்டப்பட இருக்கின்றன. இதற்காக மதுரைக் கோட்டத்தில் 95 ரயில் நிலையங்களில் நவீன கடைகள் கட்ட ரயில்வே வாரியம் ரூபாய் 5.65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதே போல சென்னை கோட்டத்தில் 133 ரயில் நிலையங்கள் மற்றும் திருச்சி கோட்டத்தில் 93 ரயில் நிலையங்களில் நிரந்தர கடைகள் கட்ட முறையே ரூபாய் 7.98 கோடி மற்றும் ரூபாய் 5.38: கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via