நாகூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்.

மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் பொறையார் காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்று (அமர்வு வழக்கு எண் 148/2024) நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை குற்றவியல் நீதிபதி எம்.கே. மாயகிருஷ்ணன் இந்த வழக்கில் அப்போதைய பொறையார் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய சிங்காரவேல் (தற்போது நாகூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்) வழக்கின் விசாரணைக்கு சாட்சி கூற ஆஜராகாத காரணத்தால் அவருக்கு ஜாமீனில் வெளிவராத வகையில் பிடிவாரண்டு பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Tags : நாகூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்.