தமிழகத்தில் ஆங்காங்கே பல பகுதிகளாக இடிமழை தொடரும்.

by Editor / 24-07-2022 05:44:46pm
தமிழகத்தில் ஆங்காங்கே பல பகுதிகளாக இடிமழை தொடரும்.

இலங்கை ஒட்டி நீடித்து வந்த மேலடுக்கு சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடிமழை பதிவாகி வந்தது.

மேலடுக்கு சுழற்சி மறைந்ததால் இன்று முதல் இடிமழையின் பரப்பளவு சற்று குறைந்து காணப்படும். இருப்பினும் காற்று முறிவு காரணமாக வரும் நாட்களிலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் இடிமழை தொடரும்.
மேலும் மேற்கு உள் மாவட்டங்கள் மற்றும் தென் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடிமழை தொடரும். 

 வரும் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒட்டி மீண்டும் இலங்கை அருகே ஒரு காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதால் மீண்டும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலானது முதல் பரவலாக இடிமழைக்கு வாய்ப்பு உருவாகும். 
அடுத்த சற்று சிறப்பான வெப்பச்சலன இடிமழையாக அமையும்.

 

Tags :

Share via

More stories