நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து - முதல்வர் அறிவிப்பு

by Staff / 18-10-2023 01:38:37pm
நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து - முதல்வர் அறிவிப்பு

நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கள ஆய்வில் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் இக்கூட்டத்தில் பேசிய அவர், 10 வீடுகளுக்கு குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் பொது இணைப்பு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுகிறது. 10 வீடுகளுக்கும் குறைவாக, 3 மாடிகளுக்கும் மிகாத, மின்தூக்கி (லிப்ட்) வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டண சலுகை வழங்கப்பவதாக அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo