பெண்களுக்கு ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைதிட்ட ஆய்வு பணிகள் தீவிரம்.
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்படும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. பயனாளிகள் கொடுக்கும் இந்த விண்ணப்பங்கள் விசாரணை செய்யப்பட்டு அதில் தேர்வாகும் நபர்களுக்கு உடனடியாக மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதாவது நீங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக மெசேஜ் வரும். செப்டம்பர் 5ஆம் தேதிக்கு முன் இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல் செல்லும். தேர்வு செய்யப்படாதவர்களுக்கும் அந்த மெசேஜ் செல்லும். நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
Tags : பெண்களுக்கு ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைதிட்ட ஆய்வு பணிகள் தீவிரம்.



















