பழனி முருகன் கோவிலில் அக்: 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை. 

by Editor / 03-09-2023 08:29:34am
பழனி முருகன் கோவிலில்  அக்: 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை. 

பழனி முருகன் கோவிலில் திருப்பதி போல அக்டோபர் 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் நம்பர் ஒன் கோவிலாக இருப்பது பழனியாகும். இங்கு வருகை தரும் பக்தர்கள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகள் மூலமாக மலைக்கோயிலுக்கு சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கோவில் கருவறையை ஒருவர் படம்பிடித்ததாக எழுந்த புகார் நீதிமன்றம் வரை சென்றது. தற்போதைக்கு இதை தடுக்க செல்போன் கொண்டு வருபவர்களை மலையில் இருந்து இறக்கி விடுங்கள் என தெரிவித்த நீதிபதிகள், கோவிலில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கட்டமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

 

Tags :

Share via

More stories

Logo