கவிஞர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு சீமான் இரங்கல்
திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கபிலனின் மகள் தூரிகை (28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். "பீயிங் வுமன்" (Being Women) என்னும் இணைய இதழை நடத்தி வந்தார். ஆடை வடிவமைப்பாளராக திரைப்படங்களில் பணியாற்றி வந்தார்.
அவரின் தற்கொலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ர் கபிலனின் மகள் தூரிகை மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன். தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித் தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
Tags :



















