சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் திடீரென தீ விபத்து.

by Editor / 08-10-2024 09:27:07am
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் திடீரென தீ விபத்து.

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று (அக். 8) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் திடீரென தீ விபத்து.

Share via

More stories

Logo