திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

by Staff / 18-04-2022 01:32:39pm
திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட  ஒரு கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்


சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவல் கிடைத்தது அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் சென்னையை சேர்ந்த வினோத்குமார் பேஸ்ட் வடிவில் 2 கிலோ தங்கத்தை எடுத்து வந்து நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் கொடுத்தபோது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர். தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories