ஹரியானா மாகாணத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

by Staff / 18-04-2022 01:35:28pm
ஹரியானா மாகாணத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது அம்மாவட்டத்தில் உள்ள குண்டலி என்ற இடத்தில் ரசாயன ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில் அது மளமளவென அறை முழுவதும் பரவியது அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியது. தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது ஹரியானா அரசின் வேண்டுகோளின் பேரில் மீட்பு பணிக்கான டெல்லியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. விடுமுறை நாளில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories