தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26, 27ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெறும் தேதி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26, 27ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதில் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்.
Tags : தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26, 27ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.



















