மதிமுக அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ நேற்று (ஏப்.19) விலகிய நிலையில் நிர்வாகக் குழு கூட்டம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் துரை வைகோ விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி விலகிய தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கே இந்த விலகலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
Tags : மதிமுக அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.