‘மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்’ - சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 22) அளித்த பேட்டியில் பூரி ஜெகநாதர் கோயில் விவகாரம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய பிரதமர் மோடி தனது பேச்சை திரும்பப் பெற்று ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை எனில் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும். தமிழ்நாட்டிற்கு வரும்போது மட்டும் தமிழர்களை புகழ்ந்து பேசிய பிரதமர், தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தைக் காட்டுகிறாரா?” என்றார்.
Tags :