பாரா ஒலிம்பிக்: அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறும் இந்தியர்கள்

by Editor / 02-09-2021 08:56:35pm
பாரா ஒலிம்பிக்: அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறும் இந்தியர்கள்

 

 

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய வீரர், வீராங்கனைகள் பல வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 35வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்றும் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சுற்றுக்கு முன்னேறி பதக்கம் பெறும் வகையில் விளையாடி வருகின்றனர்.

பாரா ஒலிம்பிக்ஸ் துடுப்பு படகுப் போட்டியில் இந்திய வீராங்கனை ப்ராச்சி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும், துடுப்பு படகு மகளிர் ஒற்றையர் 200மீ பிரிவிலும் இந்திய வீராங்கனை ப்ராச்சி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் ஆகியோர் வெற்றியடைந்துள்ளனர். ஜெர்மனி வீரர் நிக்லாஸை 21- 9, 21 -3 என்ற செட் கணக்கில் சுகாஷ் யாதிராஜ் வீழ்த்தினார். தாய்லாந்து வீரர் சிரிபோங்கை 21- 7, 21- 13 என்ற செட் கணக்கில் தருண் வீழ்த்தினார்.

டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவின் அருணா காலிறுதி சுற்றில் தோல்வியடைந்துள்ளார். பெருவின் காரன்சாவிடம் 8 4 - 2 1 என்ற புள்ளிகணக்கில் அருணா தோல்வியடைந்தார்.

பாராஒலிம்பிக்கில் அறிமுக போட்டியாக இடம் பெற்றுள்ள பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21- 10, 21- 23, 21- 9 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மனோஜ் சர்காரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

 

Tags :

Share via