பெண் வயிற்றில் 46 கிலோ கட்டி

by Staff / 27-12-2022 01:13:33pm
பெண் வயிற்றில் 46 கிலோ கட்டி

கொல்கத்தாவில் பெண் வயிற்றில் 46 கிலோ கட்டி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மித்தா தாஸ் (61) என்ற அந்த பெண், கடந்த 15 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 7 மாதங்களுக்கு அவருடைய உடல்நலம் வெகுவாக குன்றியதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரது வயிற்றில் 46 கிலோ கட்டியை கண்டறிந்தனர். பின் அவற்றை 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். அந்த பெண்ணின் மொத்த எடை 100 கிலோ இருந்ததாகவும், இதில் கட்டி மட்டுமே 50 கிலோவை கொண்டிருந்ததாகவும் கூறினர்.
 

 

Tags :

Share via