பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்கு தீர்வு காணப்படும்

by Editor / 19-05-2022 12:58:48pm
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்கு தீர்வு காணப்படும்

பஞ்சு நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்திய பருத்தி கவுன்சிலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது கவுன்சிலின் முதல் கூட்டமே மே28 நாள் நடைபெறும் என்று மத்திய ஜவுளி அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலமையில் பருத்தி உற்பத்தி சார்ந்த வர்த்தகங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .பருத்தி விவசாயிகள் நூற்பாலைகள் மற்றும் நெசவாளர்களின் நலன் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். பருத்தி மற்றும் நூலை முதலில்  உள்நாட்டு தொழிலுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அமைச்சர் மீதமுள்ளவற்றை ஏற்றுமதிக்கு பயன்படுத்தலாம் என்ற யோசனை தெரிவித்தார். நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் உள்நாட்டு தொழில் துறை பாதிப்படையும் வகையில் ஏற்றுமதி இருக்கக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்கு தீர்வு காணப்படும் என பியூஸ் கோயல் உறுதியளித்தார். பருத்தி கழகம் மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரதிநிதியான நிபுணர் சுரேஷ் தலைமையில் இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும் என்றும் இந்த கவுன்சில் முதல் கூட்டம் மே 28ஆம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் பருத்தித்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தப்படும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது உடன் விவாதங்களின் இந்த கவுன்சில் நடத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் .இதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பியூஸ் கோயல் ஆகியோரே கனிமொழி தலைமையிலான தமிழக எம்பிக்கள் சந்தித்து நூல் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என கேடு கொண்டார்.

 

Tags :

Share via