பாலியல் குற்றவாளிகளுக்கு தலைவனாக திகழ்கிறார் சீமான்- தமிழக மகிளா காங்கிரஸ்

by Editor / 02-09-2021 08:53:30pm
பாலியல் குற்றவாளிகளுக்கு தலைவனாக திகழ்கிறார் சீமான்- தமிழக மகிளா காங்கிரஸ்

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறவேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளராக மாறிவிட்டதாக குற்றம்சாட்டிய தீர்மானமும் இடம்பெற்றிருந்தது.

அதன்பின்னர் பேசிய தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராதாகிருஷ்ணன், ,மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. என்றும் கே.டி.ராகவன் தனது கட்சி பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ பெண்களுக்கு அச்சுறுத்தல் , பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

இந்த பிரச்சனை தொடர்பாக மவுனம் சாதித்து ராகவனுக்கு துணை போகும் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்தோம் என்றும் கூறினார். மேலும் சீமானை சும்மா விடமாட்டோம் சீமானின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

 

Tags :

Share via