சீன நிறுவன தயாரித்த ரோபோ நாயை தங்களின் சொந்த தயாரிப்பு என்று காட்சிப்படுத்திய பல்கலைக்கழகம் வெளியேற்றம்

by Admin / 18-02-2026 10:23:41pm
 சீன நிறுவன தயாரித்த ரோபோ நாயை தங்களின் சொந்த தயாரிப்பு என்று காட்சிப்படுத்திய பல்கலைக்கழகம் வெளியேற்றம்

டெல்லியில்  பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏ ஐ இம்பா க்ட் உச்சி மாநாடு 2026 நிகழ்வில் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த கல் கோடியாஸ் பல்கலைக்கழகம் சீன நிறுவனமான யூனிட் ரீ தயாரித்த ரோபோ நாயை தங்களின் சொந்த தயாரிப்பு என்று கூறி காட்சிப்படுத்தியது. பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தம் எக்ஸ் வலைதள பதிவில், இந்த மாநாட்டை ஒரு ஒழுங்கற்ற பி. ஆர். காட்சி என்றும் இந்திய திறமைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுவதாகவும் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்திருந்தார். இந்தப் பிரச்சனை பெரும் விவகாரமாக வெடித்ததை அடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்த பல்கலைக்கழகத்தை மாநாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டது .அத்துடன் பல்கலைக்கழக ஸ்டாலுக்கான மின்சார இணைப்பையும் துண்டித்தது. இதனை அடுத்து கல் கோடியாஸ் பல்கலைக்கழகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது. அங்கு பணியாற்றிய பிரதிநிதி  போதிய தகவல்கள் இன்றி ஆர்வக்கோளாறால் தவறான தகவலை கூறிவிட்டதாக விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக அரங்கு அகற்றப்பட்டு .அந்த இடம் பார்வையாளர்கள் ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo