உரிமை கோரப்படாமல் இருந்த 22 உடல்கள் போலீஸ் முன்னிலையில் அடக்கம்.

by Editor / 11-05-2025 08:36:49am
உரிமை கோரப்படாமல் இருந்த 22 உடல்கள் போலீஸ் முன்னிலையில் அடக்கம்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் உரிமை கோரப்படாமல் இருந்த 22 உடல்களை காவல்துறையினர் ராஜகோரி மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். விபத்துகளில் காயமடைந்தவர்கள், அடையாளம் தெரியாதவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இவர்களது உடல்கள் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதில் 17 ஆண்களும், 5 பெண்களின் உடல்களும் கடந்த சில மாதங்களுக்கு மேல் இருந்தது. இவர்களது உடல்களை பெற யாரும் உரிமை கோராத நிலையில் காவல்துறையினர் நல்லடக்கம் செய்தனர்.

 

Tags : உரிமை கோரப்படாமல் இருந்த 22 உடல்கள் போலீஸ் முன்னிலையில் அடக்கம்.

Share via