புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக 8 வயது சிறுவனை அறிவித்தார் தலாய்லாமா.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவை சேர்ந்த 8 வயது சிறுவனை, புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக, அந்த மதத்தலைவர் தலாய் லாமா அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனையடுத்து அந்த சிறுவனுக்கு 10வது கல்க்ஹா ஜெட்சன் தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த 8ம் தேதி நடந்ததாக வெளியாகி உள்ளது.இரட்டையர்களில் ஒருவரான இந்த சிறுவனின் தந்தை அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பாட்டி, மங்கோலியா பார்லிமென்டில் எம்.பி., ஆக இருந்துள்ளார். தந்தை அல்டன்னர் சின்ச்சுலூன் எனவும், தாயார் மங்க்னசன் நர்மதனாக் என தெரியவந்துள்ளது.தங்களது நாட்டை சேர்ந்த சிறுவன் புத்தமதத்தின் 3வது பெரிய தலைவராக நியமிக்கப்பட்டதை அறிந்த உடன் மங்கோலிய மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :