மது போதையில் பேருந்தில் ஏற சென்ற நபரை செருப்பால் அடித்து எட்டி உதைத்த நடத்துனர்.
தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிறுத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி .கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் போதையில் இருந்த நபர் ஒருவர் அரசு பேருந்தில் ஏறுவதற்கு முயற்ச்சித்துள்ளனர். அப்போது அரசு பேருந்து நடத்துனர். போதையில் இருந்த நபரை பேருந்தில் ஏறவிடாமல் தடுத்துள்ளார்.
இந்நிலையில் பேருந்தில் ஏறாமல் கீழே இருந்த நபரை நடத்துனர் பேருந்தில் இருந்தவாறு காலால் எட்டி உதைத்தார்.அப்போது நடத்துனரின் காலில் இருந்த செருப்பு கீழே விழுந்தது. இதனை எடுக்க பேருந்தை விட்டு கீழே இறங்கிய நடத்துனர் பேருந்து நிலையத்தில் இருந்த அந்த போதை நபரை செருப்பால் அடித்து கீழே தள்ளினார். இருப்பினும் ஆத்திரம் தீராத நடத்துனர். மீண்டும் அந்த நபரை செருப்பால் அடிக்க பாய்ந்தார் அப்போது அங்கிருந்த பயணிகள் நடத்துனரை சமதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இருப்பினும் பேருந்து நடத்துனரே அநாகரிமாக நடந்து கொண்ட சம்பவம் அங்கிருந்த பபணிகள் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க செய்தது. மேலும் இது பயணிகளிடம் நாகரிகம் மற்ற செயலாலில் நடந்துகொள்ளும் நடத்துனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது முறையான கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags : செருப்பால் அடித்து எட்டி உதைத்த நடத்துனர்.