கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 70 பேருக்கு அபராதம் 15 பேர் இடமாற்றம்.

by Editor / 03-08-2022 08:48:35pm
 கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 70 பேருக்கு அபராதம் 15 பேர் இடமாற்றம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதேபோல சேலம் மாவட்டம் முழுவதும் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக  அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

இதில், பல்வேறு கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஒரு பட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த 55 பணியாளர்கள், பத்து ரூபாய் கூடுதலாக மதுபானம் விற்ற 15 பணியாளர்கள் என மொத்தம் 70 பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பத்து ரூபாய் கூடுதலாக மதுபானம் விற்ற 15 பேரை வெவ்வேறு கடைகளுக்கு இடமாற்றம் செய்ய மண்டல அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து15 விற்பனையாளர்களை குறைந்தளவு விற்பனையாகும் மது கடைகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

 

Tags : 70 people were fined for selling liquor at extra cost and 15 people were transferred.

Share via