குஜராத்தில் கடும் வெப்பம்.. 2 வீரர்கள் பலி

by Staff / 20-07-2024 03:18:27pm
குஜராத்தில் கடும் வெப்பம்.. 2 வீரர்கள் பலி

குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள 'ஹராமி நல்லா' சிற்றோடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி மற்றும் ஒரு ஜவான் கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்தனர். இவர்கள் இருவரையும் மற்ற வீரர்கள் மீட்டு புஜில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருவருக்கும் வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo