இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிவிபத்து 7 பேர் பரிதாபபலி.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணங்குளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் , மில்கிஸ் உள்பட 9 பேர் குடும்பத்துடன் ஒரு இனோவா காரில் நேற்று மதுரையில் நடந்த கோவில் விழாவிற்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை மாரியப்பன் ஓட்டிவந்துள்ளார். இதுபோன்று நெல்லை டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்கரெட்மேரி, மகன்
ஜோபர்ட் , மருமகள்,அமுதா மற்றும் ஜொகனா, ஜொபினா,ஜொகன் ஆகியோர் காரில் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இரண்டு கார்களும் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது இனோவா கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியத்தை தாண்டி தனிஸ்லாஸ் வந்த கார் மீது மீது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இரண்டு பேரும், வள்ளியூர் அரசு மருத்துவமனையில் இரண்டுபேரும் என 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தனிஸ்லாஸ், மில்கிஸ் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் நெல்லையில் உயிரிழந்த மார்கரட் மேரி,ஜோபர்ட் ,அமுதா,ஜோகன் ஆகிய நான்கு பேரின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது. விபத்தில் இனோவாக் காரை ஓட்டிவந்து படுகாயம் அடைந்த மாரியப்பன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் சுகுமார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்றுவரும் மாரியப்பனின் உடல்நிலை விபரங்களை கேட்டறிந்தார், மருத்துவமனையில் உள்ள உடல்களையும் பார்வையிட்டார். மேலும் விபத்து குறித்து ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாங்குநேரி ஏ.எஸ்.பி பிரசன்னகுமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிவிபத்து 7 பேர் பரிதாப பலி.