ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு

by Staff / 21-01-2023 11:38:13am
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். நாளை மறுநாள் நடக்க உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நல்ல முடிவெடுப்போம். ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் ஆதரவு அளிப்போம். பாஜக தேசிய கட்சியாக இருப்பதால், அவர்கள் போட்டியிட்டால் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo