"வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டு வருகிறது"

ஒன்றரை கோடி லிட்டர் அளவு பால் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு, வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன் கடந்த ஆண்டு அளித்துள்ளோம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "பால் உற்பத்தியில் விவசாயிகளின் பங்களிப்பு 21%-ஆக உள்ளது. தமிழ்நாட்டில் இரண்டே கால் கோடி லிட்டர் அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டு 36 லட்சம் லிட்டர் அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் உற்பத்தியை பெருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :