ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம்

by Editor / 01-08-2021 12:27:23pm
 ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு 3 மாத கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, அரசு சார்பில் ஸ்டெர்லைட்டுக்கு வழங்கி வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்றத்தின் அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதனையடுத்து, 2-வது கட்ட கொரோனா அலையில் இந்தியாவிற்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்பட்டது. இதனால் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மூன்று மாத காலத்திற்கு, அதாவது ஜூலை 31ம் தேதி வரை ஆலையை திறக்க அனுமதி கொடுத்தது.

மேலும், ஆக்சிஜன் தேவையைப் பொறுத்து, நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இன்று காலை ஆலைக்கு வழங்குவதற்கான தண்ணீரை அரசு நிறுத்தியுள்ளது. இதனையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டதை தொடர்ந்து பணியாளர்கள் வெளியேறினர்.

 

Tags :

Share via

More stories