இந்திய உள்நாட்டு விமான சேவை மென்பொருள் புதுப்பித்தல் பணிநிறைவுறும் நிலையில்..

by Admin / 29-11-2025 09:19:54pm
இந்திய உள்நாட்டு விமான சேவை மென்பொருள் புதுப்பித்தல் பணிநிறைவுறும் நிலையில்..

இந்திய உள்நாட்டு விமான சேவை மென்பொருள் புதுப்பித்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏர் பஸ் A 320  இண்டிகோ ஏர் இந்தியா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான 338 ஏர் பஸ் ஏ320 குடும்ப விமானங்கள் இந்த மென்பொருள் மாற்றங்களுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு காரணமாக பல விமானங்கள் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டுள்ளன இதன் விளைவாக சில விமானங்கள் தாமதமாகி வருகின்றன அவற்றின் அட்டவணையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன ஆனாலும் விமான நிறுவனங்கள் எந்த விமானங்களையும் ரத்து செய்யவில்லை. இன்றைய நிலவரப்படி 338 விமானங்களில் 56 விழுக்காடு அதாவது 189 விமானங்கள் மென்பொருள் புதுப்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை மீண்டும் இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. புதுப்பிக்கப்படாத விமானங்கள் நாளைக்குள் மென்பொருள் புதுப்பிக்கப்பட்டு அந்தப் பணி நிறைவடையும்.என்றும் தகவல்.

 

Tags :

Share via