ஆடி  அமாவாசையை சுவாமி அஸ்த்திரத்தேவர்க்கு 16வகை அபிசேகங்களுடன் தீர்த்தவாரி நடைடெற்றது.  

by Editor / 16-08-2023 10:55:52am
ஆடி  அமாவாசையை சுவாமி அஸ்த்திரத்தேவர்க்கு 16வகை அபிசேகங்களுடன் தீர்த்தவாரி நடைடெற்றது.  

அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 04-00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 04-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 05-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற்று  அதனைத்தொடர்ந்து  பல்வேறு கால பூஜைகளும்  நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து  சண்முகவிலாஸ் மண்டத்தில் 
சுமாமி அஸ்திரத்தேவர்க்கு பால், பழம், மஞ்சள், சந்தணம், இளநீர் உள்ளிட்ட பதினாறு வகையான அபிசேகங்கள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து சுவாமி  அஸ்திரத்தேவர்க்கு குடை பிடித்தபடி மேள தாளங்களுடன் கடலுக்கு கொண்டுவரப்பட்டு கடலில் சுவாமி அஸ்திரத்வர்க்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது. தீர்த்தவாரியை தொடர்ந்து  சண்முகவிலாஸ் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 

Tags :

Share via

More stories