கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக்காதலன்

by Admin / 17-03-2022 11:37:39am
கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக்காதலன்

மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் விக்கி தன்னுடைய மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.

அந்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து சில மாதங்களுக்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியில் வந்துள்ளார். 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  தங்கி தெரு தெருவாக பாட்டில்  மற்றும் பழைய பொருட்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். 

அப்போது சுதா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.  

இந்த நிலையில், தினமும் குடித்துவிட்டு சுதாவை, விக்கி துன்புறுத்தி வந்ததால், அவருடன் சுதா வாழ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சுதாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
 
நீ குடித்துவிட்டு என்னை அடித்து துன்புறுத்துவதால் இனி உன்னுடைய தொடர்பு தேவையில்லை என வர மறுத்துள்ளார்.

ஆத்திரமடைந்து அருகிலிருந்த பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்த விக்கி, அதனை தனது உடலில் ஊற்றி, தற்கொலை செய்யப்போவதாக எச்சரித்துள்ளார். அப்போதும் சுதா வர முடியாது என தெரிவித்ததால், தனக்குத்தானே தீவைத்து விக்கி தீக்குளித்துள்ளார்.

உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில் அவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo