தூத்துக்குடியில் பெய்த அதிகனமழைஅரிசி மூட்டைகளை சாலையில் வீசிச் சென்ற வியாபாரிகள்.

by Editor / 22-12-2023 09:27:34pm
தூத்துக்குடியில் பெய்த அதிகனமழைஅரிசி மூட்டைகளை சாலையில் வீசிச் சென்ற வியாபாரிகள்.

அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக வியாபாரிகள் சாலையில் வீசிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக, ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500க்கும் மேற்பட்ட சிறு குறு கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் மறு பயன்பாட்டுக்கு உதவாது என்பதால் சாலையில் வீசியுள்ளனர் வியாபாரிகள்.

 

Tags : அரிசி மூட்டைகளை சாலையில் வீசிச் சென்ற வியாபாரிகள்

Share via

More stories

Logo