பொன் மாணிக்கவேல் மீது புகார் சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர்பாஷா காவல்துறை முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது கூறியுள்ள புகார் குறித்து சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி ஆக இருந்த காதர்பாஷா பணியிடை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கில் பழவூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளன் தப்பிக்க வைப்பதற்கு அவருடன் கூட்டுச் சேர்ந்து பொன்மாணிக்கவேல் அதிகாரிகள் தம்மை பழிவாங்கும் நோக்கில் பொய்வழக்கு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பொன்மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Tags :