துப்பாக்கியால் சுட்டு நகை பணம் கொள்ளை துப்புத்துலக்க முடியாமல் திணறும் போலீஸ்...

by Admin / 26-12-2021 11:32:32am
துப்பாக்கியால் சுட்டு நகை பணம் கொள்ளை துப்புத்துலக்க முடியாமல் திணறும் போலீஸ்...


அரக்கோணம் அடுத்த அவினாசிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் புஷ்கரன். இவர் கிராமத்திற்கு வெளியில் தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவில் தனியாக வீடுகட்டி  தனது தாய் பெரியம்மா  மற்றும் பாட்டியுடன் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.

கடந்த 18ம் தேதி நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தபோது முகமுடி அணிந்த 3 மர்மநபர்கள் நாட்டு துப்பாக்கியால் ஜன்னல் வழியாக சுட்டு உள்ளே நுழைந்தாக கூறப்படுகிறது. 
பின்னர் பெண்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் பணம் ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி தப்பினர்.
 
நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் குண்டு ரவை சிதறி படுகாயமடைந்த 4 பேரும் உடனடியாக சிகிச்சைக்கு அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்கள்.
 
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் விசாரனை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்கள். கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகள் பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் வட இந்திய கொள்ளையர்களா என்கிற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

மேலும் குற்றவாளிகள் தப்பி சென்ற பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள், செல்போன் உரையாடல்கள் மற்றும் கைரேகைகளை பதிவு செய்து விசாரனை நடத்தி  வருகின்றனர்கள். மேலும் அரக்கோணம் போலீஸ் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்கள்.

இந்த வழக்கில் ஒரு வார காலமாகியும் எவ்வித தடயமும் துப்பும் துலங்காத நிலையில் போலீஸார் திணறி வருகின்றனர்கள். மேலும் இன்று மதியம் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சந்தோஷ்  குமார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.

அரக்கோணம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்றும் இன்றும் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் எஸ்.பி.தீபா சத்யன் ஆகியோர் தலைமையில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், பல ஆண்டுகளுக்கு முன் பணி மாறுதலாகி பல ஊர்களுக்கு சென்றவர்களை வரவழைத்து  தொடர்ந்து  ஆலோசனை நடத்தி குற்றவாளிகளை தேடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்கள்.


 
 

 

Tags :

Share via