பெண்களின் சக்தியால் திமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி -முதலமைச்சர் மு க ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில் இன்று திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பெண்கள் இந்த மாநாட்டில் திரளாக கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு முன்னிலை வகித்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றமே திராவிட புரட்சியின் விளைவு என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் திராவிடம் மடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்காக மேலும் பல மேம்படுத்தப்பட்ட திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என உறுதி அளித்தார். .திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டு பந்தல் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்று இருந்தது. இந்த மாநாட்டின் மூலம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தோழி விடுதிகள் ,பெண்களுக்கான சுய உதவி குழுக்களுக்கு அதிக கடன் வரம்பு ,ஏற்கனவே உள்ள திட்டங்களை வலியுறுத்தி எதிர்காலத்தில் பெண்களுக்கான நலத்திட்டங்களை விரிவுபடுத்து நோக்கத்துடன் நடந்த ஒரு நிகழ்வாகும் .முதலமைச்சர் திமுக அரசு பல்வேறு வழிகளில் நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் ராஜஸ்தானில் பெண்கள் செல்போனை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது போன்று இல்லாமல் ஐபோனை ஒருங்கிணைக்கும் பணியில் அனைவரும் பெண்களாகவே இருக்கிறார்கள். .அதுதான் தமிழ்நாடு என்று பெண்களுக்காக வழங்கப்படுகின்ற.திட்டங்களால் எந்த மாதிரியாக பெண்களுடைய வாழ்க்கை போக்கு வளர்ச்சியை அடைகிறது என்பதை தெளிவுபடுத்தினார். பெண்களின் சக்தியால் திமுக மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கையோடு தெரிவித்தார். இந்த மாநாட்டின் மூலம் திமுக அரசின் சாதனைகளை விளக்குவது மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு மக்களை தயார்படுத்துவது ஆகும்.
Tags :


















