இன்று புதுச்சேரியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இன்று புதுச்சேரியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 45.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குமரகுரு பள்ளம் பகுதியில் கட்டப்பட்ட 216 அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் திறந்து வைத்தார் இதற்கான வீட்டு சாவிகளை பயனாளிகளிடம் நேரடியாக ஒப்படைத்தார் புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவிடத்தில் பாரதியாரின் திருவுருவச் சிலையை அவர் திறந்து வைத்து மத கோபி மரியாதை செலுத்தினார் . அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டதோடு புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தேவையான மேலும் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு செய்தியையும் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
Tags :


















