சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை

by Staff / 01-02-2024 04:35:22pm
சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை

சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீட்டு பலன் பெறுவது பாதிக்கப்படும்; வாரிசுரிமை சட்டங்களின் மூலம் பலன் பெற முடியாத நிலை ஏற்படும், அரசு உத்தரவுப்படி கல்வி நிலைய விண்ணப்பங்களில், சாதி மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்திசெய்யாமல், அப்படியே விட்டு விடலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via