39 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது,

by Editor / 04-06-2026 01:01:01pm
39 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர்  கைது,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் இருந்து 39 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீட்சித் சுக்ரித் (22), ரசர்ந்த முரளிதர்புராடி (33) ஆகிய இருவரை கைது செய்த போலீசார், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிலரும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறியுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி பாராட்டினார்.

 

Tags :

Share via
Logo