சென்னையில் குப்பை கிடங்கில் தீ விபத்து.. 100 கார்கள் எரிந்து நாசம் போலீசார் விசாரணை

by Editor / 04-06-2026 01:07:48pm
சென்னையில் குப்பை கிடங்கில் தீ விபத்து.. 100 கார்கள் எரிந்து நாசம் போலீசார் விசாரணை

சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ, அருகே நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கும் பரவி, அவற்றை எரித்து நாசம் செய்தது. மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த வாகனங்கள் தீயில் சிக்கியதால், அப்பகுதியில் இருந்து கரும்புகை வானை மறைத்தது. இதனால், மேடவாக்கம் முதல் வேளச்சேரி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo