ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணி நாளை நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்திருந்த சூழலில் ஜெ.பி. நட்டாவின் பேரணிக்கு அனுமதி கொடுக்க காவல்துறையினர் மறுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநகர போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
Tags :