தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்டதாக மின்சாரத் துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இன்று தலைமைச் செயலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த மாதம் மின்சார தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த ஹார்ட் டிஸ்க்கள் மாயமாகின என்றும் மின்வாரியத்தின் உள் விசாரணையில் திருட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மை காலங்களில் மின்சாரத் துறையில் முறைகேடுகளில் ஈடுபட்ட சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அந்த நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் திருட்டு நடந்து இருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்.
தலைமை அலுவலகத்தில் முக்கிய பிரிவுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்களில் கணினிகளில் உள்ள மற்ற அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக பிரதி எடுக்கவும் கோப்புகளை பத்திரப்படுத்தவும் அமைச்சர் நிறுவனம் குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு அரசு துறையையோ அல்லது மின்சார வாரியத்தையோ யாரும் மிரட்டி பார்க்க முடியாது என்று முறைகேடுகளில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இரண்டரை லட்சத்திற்கு கோடிக்கு மேல் மின்வாரியம் கடனில் உள்ளது என்றும் முன்னூத்தி தொண்ணூத்தி ஏழு கோடு மதிப்புரான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகாடுகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் 18 ஹார்ட் டிஸ்க்கள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருது தெரிவித்து வருகிறார்கள்.
Tags :



















