வேலை வாங்கித் தருவதாக கூறி 23 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு சம்மன்

by Admin / 30-06-2026 12:03:19am
வேலை வாங்கித் தருவதாக கூறி 23 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு சம்மன்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 23 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் இந்த புகாரை அளித்துள்ளார். தன் மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞன் என்பவர் தன்னிடம் இருந்து 2023 முதல் 2025 வரையில் பல்வேறு தவணைகளாக 23 லட்சம் பெற்றதாகவும் இளஞ்செழியன் தன்னை அமைச்சரின் உதவியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது மேலும் தலைமைச் செயலகத்தில் தான் சிவசங்கரை நேரில் சந்தித்ததாகவும் அப்போது பணம் சரியான இடத்திற்கு சென்று விடும் வேலை கிடைத்துவிடும் என அமைச்சர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது தலைமறைவாக இருந்த இளைஞர் அணி 24 ஆம் தேதியன்று ஈரோட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான இளஞ் செழியன் இடமிருந்து கல்வி அதிகாரி என போலி அரசு அடையாள அட்டைகள் வைத்திருந்ததாகவும் அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இப் புகாரியின் அடிப்படையில், மோசடி வழக்காக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு அதில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மோசடி புகாரை முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மறுத்து தம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் என்பவருக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் அந்த பெயரில் எந்த ஒரு உதவியாளரும் தன்னிடம் பணியாற்ற வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள இளஞ்செழியன் அளித்துள்ள விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

 

Tags :

Share via
Logo