பாஜக நிர்வாகி படுகொலை: பரபரப்பு சிசிடிவி காட்சி

by Staff / 27-03-2023 02:42:29pm
பாஜக நிர்வாகி படுகொலை: பரபரப்பு சிசிடிவி காட்சி

புதுச்சேரி மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமாரன் (45). ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வரும் இவர், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார். நேற்றிரவு வில்லியனூரில் டீ கடையில் நின்றுகொண்டிருந்தபோது, ​​மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனால் டீ கடைக்கு வந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். போலீசார் செந்தில்குமாரனின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி நித்தியானந்தா தனது கூட்டாளிகளை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

 

Tags :

Share via